உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித் தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப் பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய் அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே