உருவாய் உருவில் உருவாகி ஓங்கி அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல் நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ என்தாயே என்தந்தை யே
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒருபேர் அருளார் அமுதம் தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான் மதிசேர் முடிஎம் பதியே அடியேன் குருவாய் முனமே மனமே இடமாக் குடிகொண் டவனே அபயம் அபயம்
உருவாய் அருவாய் உருவரு வாய்அவை ஒன்றுமல் லீர்இங்கு வாரீர் என்றும்நல் லீர்இங்கு வாரீர் வாரீர்