உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன் திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே