உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே வரைவளர் மருந்தே மவுனமந் திரமே மந்திரத் தாற்பெற்ற மணியே நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில் நிறைந்தர சாள்கின்ற நிதியே பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே
உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே