உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம் உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய் அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன் ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே
உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்குத் தனித்து