உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில் இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்