பாடல் எண் :2501
உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்
ஒளிபெற விளங்குசுடரே
உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
யோகநிலை அருளுமலையே
உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை
உணர்என உணர்த்துநிறைவே
உளஎனவும் இலஎனவும் உரைஉபய வசனம்அற
ஒருமொழியை உதவுநிதியே
ஒன்றுடன் இரண்டெனவி தண்டைஇடும் மிண்டரொடும்
ஒன்றல்அற நின்றநிலையே
உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய
உள்உணர உள்ளுமதியே
உன்நிலையும் என்நிலையும் அன்னியம்இ லைச்சிறிதும்
உற்றறிதி என்றபொருளே
உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என
ஓதுமெய்ப் போதநெறியே /
அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
தகந்தெளிய அருள்செய்தெருளே
ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ
அதீதஅறி வென்றஒன்றே
அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
அதீதநிலை என்றநன்றே
ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
அறிதிஎன அருளுமுதலே
அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
அறிவித்த சுத்தஅறிவே
அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது
அடைந்திடா தென்றஇறையே
ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது
அறிந்தடைதி என்றநலமே
அட்டசித் திகளும்நின தேவல்செயும் நீஅவை
அவாவிஇடல் என்றமணியே /
இலகுபரி பூரண விலாசம்அல திலைஅண்டம்
எங்கணும் எனச்சொல்பதியே
இரவுபகல் அற்றஇடம்அதுசகல கேவலம்
இரண்டின்நடு என்றபரமே
இச்சைமன மாயையே கண்டன எலாம்அவை
இருந்துகாண் என்றதவமே
யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு
இருத்திஎன உரைசெய்அரைசே
என்களைக ணேஎனது கண்ணேஎன் இருகண்
இலங்குமணி யேஎன்உயிரே
என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே
என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
எடுத்ததா யேஎன்உறவே
என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே
என்அருட் குருவடிவமே /
கலகமனம் உடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட
கருணையங் கடல்அமுதமே
காழிதனில் அன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர்
கருதுசம யாதிபர்களும்
கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
களித்துமெய்ப் போதம்உண்டு
கனிமதுரம் ஒழுகுசெம் பதிகச்செ ழும்சொன்மழை
கண்ணுதல் பவளமலையில்
கண்டுபொழி அருள்முகில் சம்பந்த வள்ளலாங்
கடவுளே ஓத்தூரினில்
கவினுற விளங்குநற் பணிகள்சிவ புண்ணியக்
கதிஉல கறிந்துய்யவே
கரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்
காட்சியே சிவஞானியாம்
கருதவரும் ஒருதிருப் பெயர்கொள்மணியேஎமைக்
காப்பதுன் கடன்என்றுமே
திருச்சிற்றம்பலம்
----------
முற்பதிப்புகள் அனைத்திலும் முப்பத்திரண்டடித் தனி ஆசிரிய விருத்தம் எனக்குறித்திருப்பது பிழை
--------------------------
--------------------------------------------------------------------------------
திருவோத்தூர் சிவஞானதேசிகன் திருச்சீர் அட்டகம் (
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.