உளத்தே இருந்தார் திருஒற்றி யூரில் இருந்தார் உவர்விடத்தைக் களத்தே வதிந்தார் அவர்என்றன் கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம் இளத்தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பன்றே வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே
உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன் வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே