உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை ஒல்லைவிட் டிடவுமில்லை உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை உனைஅன்றி வேறும்இல்லை இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால் இசைக்கின்ற பேரும்இல்லை ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின் றியம்புகின் றோரும்இல்லை வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல் மற்றொரு வழக்கும்இல்லை வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ வன்மனத் தவனும்அல்லை தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே