உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும் வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன் கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத் தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே
உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென் உள்ளத் திருந்தீரே வாரீர் விள்ளற் கரியீரே வாரீர் வாரீர்
உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக் கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன் பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது