உள்ளி யோஎன அலறிநின் றேத்தி உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும் வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன் மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன் வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய் தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே
உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும் கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே டீயஉம -------------------------------------------------------------------------------- காதற் சிறப்புக் கதுவா மாண்பு தலைவி கழற் றெதிர்மறுத்தல் -- திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்