பாடல் எண் :1227
உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ
பாடல் எண் :1363
உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ
பாடல் எண் :5046
உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே
ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே
தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே
செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே எனக்கும் உனக்கும்