உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப் பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்