ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர் கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார் தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே