ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித் தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன் தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே