எண்ணி லாநினைப் புற்றதின் வழியே இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம் கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண் கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே பிரமன் ஆதியர் பேசரும் திறனே தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே செல்வ மேபர சிவபரம் பொருளே
எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால் நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப் பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே