எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும் நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால் நன்மை என்பதோர் நாளினும் அறியேன் வண்பெ றாவெனக் குன்திரு அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே