எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன் செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல் இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே
எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர