எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய் நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன் தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்த்த அமுதே
எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான் தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன் வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத் தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே