என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார் பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன் தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே
என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந் தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன் நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே