என்உடலும் என்உயிரும் என்பொருளும் நின்னஎன இசைந்தஞ் ஞான்றே உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே றொன்றும்இலை உடையாய் இங்கே புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென் கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ
என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான் தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன் வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து