என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான் என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன் பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன் வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில் வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும் வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால் விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ