என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும் நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன் தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும் பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன் பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே