என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய் பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர் பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும் உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண் மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே