என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன் அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே