என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட என்குருவே எனக்குரிய இன்ப மேஎன் தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய் உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய் முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே