என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என் தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக் காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச் சாலையிலே வாஎன்றான் தான்