என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென் இதயத்தில் இருக்கின்ற குருவே அன்புடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருட்பெருஞ் சோதி இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என்னுயிர் நாதனே என்னைப் பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே பொதுநடம் புரிகின்ற பொருளே