என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும் நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால் பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய் மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே