என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைய நினைவீரேற் பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யறியென்றார் மின்மேற் சடையீ ரீதெல்லாம் விளையாட் டென்றே னன்றென்றார் அன்மேற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற் பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ