என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே இயல்உருவி லேஅருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே எறிஆத பத்திரளிலே ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே ஒளிஒளியின் ஒளிநடுவிலே ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள் ஒளியேஎன் உற்றதுணையே அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன் அய்யனே அரசனேஎன் அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே தூயனே என்நேயனே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே