என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால் கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன் துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே பணித்திறம் வேட்டல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்
என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும் ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும் நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும் கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே