எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண் விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன் வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே
எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்துவே றெண்ணிய துண்டோ செம்மலுன் பாதம் அறியநான் அறியேன் சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன் இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள தியற்றுவ துன்கடன் எந்தாய்