எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய் எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய் அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி எழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தென் கரத்தே சம்மதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன் தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே