எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே அளிய தாகிய நெஞ்சினார்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே
எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம் எண்ணி னுட்படா வேனும்மற் றவையை அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக் கருணை ஈகுதல் கடன்உனக் கையா தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே