எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக் கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன் உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்