ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே ஓங்கி வார்ஒற்றி யூர்இடை அரவும் ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல் தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே