ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத் தென்னைஆட் கொண்டெனை உவந்தே ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என்னுயிர்த் துணைவா வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான போதகம் தருதற் கிதுதகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே