ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள் செய்வகை தெரிவித் தென்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும் பொய்வகை அறியேன் வேறு புகலிலேன் பொதுவே நின்று மெய்வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே