ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே யென்னா குலத்தை யோட்டுமென்றே னிடைய ரலநா மென்றுரைத்தார் பொன்னாற் சடையீ ரென்றேனென் புதிய தேவி மனைவியென்றார் சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் சுத்த வியப்பொன் றென்றாரே
ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ