ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள் நன்றிலேன் எனினும் நின்திரு வடியை நம்பினேன் நயந்தருள் என்றாள் குன்றிலே இருத்தற் குரியநான் துயரக் குழியிலே இருந்திடேன் என்றாள் மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே