Vallalar.Net
Vallalar.Net

ஒன்றே

பாடல் எண் :4439
ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும் 

ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர் 

நன்றேநின் றீர்இங்கு வாரீர்  வாரீர்
பாடல் எண் :5499
ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு 
நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச் 
சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி 
பத்திஎலாம் பெற்ற பலன்
பாடல் எண் :5615
ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம் 
நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே 
நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம் 
இடம்புரிக வாழ்க இசைந்து