ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன் புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான் சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத் துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்