ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான் தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர் எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ