ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன் உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப் பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப் பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன் குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித் தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அபராத மன்னிப்பு மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்