ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும் ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில் ஆங்காரப் பெருமதமால் யானை போல அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன் பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும் பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே