ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில் ஊர்தொறும் உண்டியே உடையே தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருளென மதித்து நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே