ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம் ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக் காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே