கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகமெலாம் அளிப்போனே அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே
கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன் கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன் விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன் விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன் எனக்கும் உனக்கும்