கண்கள் முன்றினார் கறைமணி மிடற்றார் கங்கை நாயகர் மங்கைபங் குடையார் பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கயப் பதத்தார் ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம் மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே
கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம் பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன் பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின் னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ